/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு பள்ளியில் உலக மரபு வார விழா
/
அரசு பள்ளியில் உலக மரபு வார விழா
ADDED : நவ 25, 2024 05:09 AM

விழுப்புரம் : விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் உலக மரபு வார விழா நடந்தது.
விழாவிற்கு, பள்ளி தலைமை ஆசிரியர் சசிகலா தலைமை தாங்கினார். சமூக அறிவியல் ஆசிரியர் சுசீலா வரவேற்றார். மாவட்ட வரலாறு மற்றும் பண்பாட்டுப் பேரவை ஒருங்கிணைப்பாளர் செங்குட்டுவன் சிறப்புரையாற்றினார்.
அப்போது, விழுப்புரம் மாவட்டத்தில் காணப்படும் குன்னம் கிரானைட் கற்கள், திருவக்கரை கல் மரங்கள், மண்டகப்பட்டு குடைவரைக் கோவில், செஞ்சி கோட்டை உள்ளிட்ட மரபு சின்னங்கள் குறித்து விளக்கினார்.
மேலும், வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்தும் வலியுறுத்திப் பேசினார். சமூக அறிவியல் ஆசிரியர் ஜெயராம லட்சுமி நன்றி கூறினார். ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் பங்கேற்றனர்.