/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விளைச்சல் போட்டி: விவசாயிகளுக்கு அழைப்பு
/
விளைச்சல் போட்டி: விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : மே 19, 2025 11:30 PM
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட விவசாயிகள், மாநில, மாவட்ட அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் வேளாண் இணை இயக்குநர் ஈஸ்வர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு;
வேளாண்மைத் துறை சார்பில் மாநில மற்றும் மாவட்ட அளவிலான பயிர் விளைச்சல் போட்டி, ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகின்றது. இதில், விழுப்புரம் மாவட்டத்தில் 2025-26ம் ஆண்டில் செம்மை நெல், கரும்பு, உளுந்து, கம்பு, கேழ்வரகு, திணை, நிலக்கடலை, எள், பச்சைப்பயிறு மற்றும் பாரம்பரிய நெல் ஆகிய பயிர்களில், மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டி நடத்தப்பட உள்ளது.
இதில், விவசாயிகள் பங்கேற்க பதிவு கட்டணம் ரூ.150. அந்தந்த வேளாண் விரிவாக்க மையங்களில் செலுத்தி, இப்போட்டியில் கலந்து கொள்ளலாம். கடந்தாண்டு பயிர் விளைச்சல் போட்டியில், கரும்பு பயிரில் 293.28 மெ.டன் மகசூல் எடுத்து, மாநில அளவில் முதல் பரிசு பெற்ற விக்கிரவாண்டி ராஜலட்சுமிக்கு ரூ.2.50 லட்சமும், நிலக்கடலையில் ஹெக்டருக்கு 12.30 மெ.டன் எடுத்த மரக்காணம் லட்சுமணனுக்கு 2வது பரிசாக ரூ.1.50 லட்சமும் பரிசு வழங்கப்பட்டது.
எனவே, இந்தாண்டு அதிக அளவிலான விவசாயிகள், பயிர் விளைச்சல் போட்டியில் பங்கேற்று சிறப்பாக பயிரிட்டு, பரிசை வெல்ல வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.