/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
உழைக்காமலேயே ஜெயித்து விட முடியாது : அ.தி.மு.க.,வினருக்கு மா.செ., சண்முகம் 'அட்வைஸ்'
/
உழைக்காமலேயே ஜெயித்து விட முடியாது : அ.தி.மு.க.,வினருக்கு மா.செ., சண்முகம் 'அட்வைஸ்'
உழைக்காமலேயே ஜெயித்து விட முடியாது : அ.தி.மு.க.,வினருக்கு மா.செ., சண்முகம் 'அட்வைஸ்'
உழைக்காமலேயே ஜெயித்து விட முடியாது : அ.தி.மு.க.,வினருக்கு மா.செ., சண்முகம் 'அட்வைஸ்'
ADDED : நவ 04, 2025 01:15 AM

விழுப்புரம்:  'தேர்தலில் வெல்ல முடியாது என தெரிந்து கொண்ட ஸ்டாலின், பணத்தை கொண்டு பலரை விலைக்கு வாங்கி, அவர்கள் மூலம் ஜெயித்து விடலாம் என எண்ணுகிறார்' என அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் சண்முகம் பேசினார்.
அ.தி.மு.க., சார்பில் வாக்காளர்கள் தீவிர திருத்த பணி தொடர்பான ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு, நகர செயலாளர் பசுபதி தலைமை தாங்கினார். ராமதாஸ் வரவேற்றார். மாவட்ட மாணவரணி செயலாளர் சக்திவேல், எம்.ஜி.ஆர்., மன்ற இணைச் செயலாளர் தங்கசேகர், ஒன்றிய செயலாளர்கள் ராமதாஸ், ராஜா, முன்னாள் பேரூராட்சி சேர்மன் முருகவேல் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சண்முகம் பேசியதாவது:
வாக்காளர்கள் திருத்தம் பணி என்பது மிகவும் முக்கியமானது. ஸ்டாலின் தான் செய்த மோசடியை மறைக்க இந்த வாக்காளர்கள் திருத்தம் பணியை தமிழகத்தில் எதிர்கிறார். இதற்கு எல்லாம் நிர்வாகிகள் இடம் கொடுக்காமல் வாக்காளர்கள் திருத்த பணியை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.
இந்த சிறப்பு வாக்காளர் திருத்தம் பணியை நாம் ஏற்று கொள்கிறோம். இதை தமிழகத்தில் நடைமுறைபடுத்த வேண்டும் என நாம் தான் பல தேர்தல்களில் கோரிக்கை வைத்தோம். இந்த கோரிக்கை தற்போது தான் நிறைவேறியுள்ளது.
இந்த பணியில் பூத் நிர்வாகிகள் மட்டும் ஈடுபடாமல், அனைத்து அ.தி.மு.க., நிர்வாகிகளும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்.
அப்போது தான் நாம் இந்த தேர்தலில் வெற்றிபெற முடியும். உழைக்காமலேயே ஜெயித்து விட முடியாது. இந்த தேர்தலில் நாம் துரோகிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும். உங்களின் கடமை, பணி, உணர்வு அனைத்தும் அ.தி.மு.க., ஆட்சிக்கு வருவதில் மட்டுமே இருக்க வேண்டும்.
தேர்தலையொட்டி, தி.மு.க., அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்துகின்றனர். தேர்தலில் வெல்ல முடியாது என தெரிந்து கொண்ட ஸ்டாலின், பணத்தை கொண்டு பலரை விலைக்கு வாங்கி, அவர்கள் மூலம் ஜெயித்து விடலாம் என எண்ணுகிறார்.
அ.தி.மு.க., தொண்டர்கள் நிறைந்த இயக்கம். தலைவர்கள் நிறைந்த இயக்கம் இல்லை. இது கோபாலபுரம் தி.மு.க., இல்லை. நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து தேர்தலில் இவர்களை வீழ்த்த பாடுபட வேண்டும்.
இவ்வாறு சண்முகம் பேசினார்.
அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு ஜெகதீஸ்வரி சத்யராஜ், கவுன்சிலர்கள் கோல்டு சேகர், கலை, நிர்வாகிகள் பாஸ்கர், கதிரவன், ரகுராமன், கிருஷ்ணன், ராம்குமார், கோதண்டம், ஆவின் செல்வம், செந்தில்வேலன், சேட்டு, முத்துவேல், திவாகர், விஜய் உட்பட பலர் பங்கேற்றனர்.

