/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இளஞ்சூடேற்றுதல் நிகழ்ச்சி
/
கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இளஞ்சூடேற்றுதல் நிகழ்ச்சி
கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இளஞ்சூடேற்றுதல் நிகழ்ச்சி
கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இளஞ்சூடேற்றுதல் நிகழ்ச்சி
ADDED : நவ 04, 2025 01:14 AM
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே உள்ள செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இந்த ஆண்டு அரவைப் பருவத்திற்கான கொதிகலன் இளஞ்சூடேற்றுதல் நிகழ்ச்சி நடந்தது.
செயலாட்சியர் முத்து மீனாட்சி தலைமை தாங்கி இணை மின் உற்பத்தி திட்ட கொதிக்கலனில் தீப்பந்தம் மூலம் இளஞ்சூடேற்றுதலை தொடங்கி வைத்தார். மேலும் ஆலைக்கு அதிக அளவில் கரும்பு சப்ளை செய்த கோட்டத்திற்கு இரண்டு விவசாயிகளுக்கு முதல் மற்றும் இரண்டாம் பரிசு பொருட்கள் மற்றும் சான்றுகளை வழங்கி பேசினார்.
தலைமை கரும்பு அலுவலர் வில்லியம் அந்தோணி, கரும்பு அபிவிருத்தி அலுவலர் தாமரைச்செல்வி, துணை தலைமை ரசாயனர் செந்தில்குமார், பாலசுப்ரமணியன் அலுவலகம் மேலாளர் மற்றும் தொழிலாளர் நல அலுவலர்கள் செந்தில்குமார் மற்றும் கரும்பு அலுவலர்கள் கரும்பு உதவியாளர்கள் பணியாளர்கள் விவசாய சங்க பிரதிநிதிகள் விவசாயிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

