நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம் அருகே கொங்கம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் குருசெல்வன் மனைவி சிவரஞ்சனி, 29; இவர்களுக்கு திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. விசாலினி என்ற 5 மாத பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில், சிவரஞ்சனி கடந்த 31ம் தேதி வீட்டில் உள்ள கழிவறையில் உள்ள இரும்பு குழாயில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.