/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பெண் மீது தாக்குதல் வாலிபர் கைது
/
பெண் மீது தாக்குதல் வாலிபர் கைது
ADDED : ஜூலை 02, 2025 06:22 AM
விழுப்புரம், : விழுப்புரம் அருகே பெண்ணை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் அடுத்த வளவனுாரை சேர்ந்தவர் பாஸ்கர், 25; இவருக்கு, 23 வயது பெண்ணுடன் திருமணமாகி, 3 குழந்தைகள் உள்ளனர். இந்த தம்பதி தற்போது சென்னையில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் விழுப்புரம் அடுத்த தளவானுாரை சேர்ந்த பாலசுந்தரமூர்த்தி மகன் ஸ்டாலின்,27; என்பவருக்கு கடந்தாண்டு, பாஸ்கரின் மனைவியுடன் நெருக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் இந்த இருவரையும், பாஸ்கரின் தாயார் செல்வி, 44; கண்டித்தார்.
இதையடுத்து கடந்த 28ம் தேதி இரவு, ஸ்டாலின் வளவனூரில் வீட்டிற்கு நடந்து சென்ற செல்வியை வழி மறித்து, திட்டி சரமாரியாக தாக்கினார். இதுகுறித்து செல்வி புகாரின் பேரில், வளவனூர் போலீசார் வழக்கு பதிந்து ஸ்டாலினை கைது செய்தனர்.