/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
2,500 கிலோ ரேஷன் அரிசி பதுக்கிய வாலிபர் கைது
/
2,500 கிலோ ரேஷன் அரிசி பதுக்கிய வாலிபர் கைது
ADDED : மே 20, 2025 12:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம் அருகே 2,500 கிலோ ரேஷன் அரிசி பதுக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் அடுத்த அத்தியூர் திருக்கையில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று சோதனை செய்தபோது, அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் பின்புறம் 50 சாக்கு மூட்டைகளில் 2,500 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது.
இதையடுத்து, ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து, அதே பகுதியை சேர்ந்த இளவரசன் மகன் தாமோதரன், 28; என்பவரை கைது செய்தனர்.