/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குட்கா வைத்திருந்த வாலிபர் கைது
/
குட்கா வைத்திருந்த வாலிபர் கைது
ADDED : செப் 29, 2025 01:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார்: குட்கா பாக்கெட்டுகள் வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த சரவணம்பாக்கம் கூட்ரோடு பகுதியில் இன்ஸ்பெக்டர் அழகிரி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பெரியசெவலை அரசு பள்ளி அருகில் சந்தேகத்தின் பேரில் நின்று கொண்டிருந்த வாலிபரை விசாரணை செய்ததில் அவர் தடை செய்யப்பட்ட, 30 குட்கா பாக்கெட்டுகள் வைத்திருந்ததும், உளுந்துார்பேட்டை அருகே உள்ள புத்தனந்தல் கிராமத்தைச் சேர்ந்த முருகன் மகன் பிரகாஷ், 29; என்பதும் தெரிய வந்தது.
போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்த, 30 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.