/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பொது பேரவை கூட்டம்
/
செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பொது பேரவை கூட்டம்
செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பொது பேரவை கூட்டம்
செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பொது பேரவை கூட்டம்
ADDED : செப் 29, 2025 01:11 AM

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே உள்ள செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 10வது பொது பேரவை கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, ஆலை செயலாட்சியர் முத்து மீனாட்சி தலைமை தாங்கினார். தலைமை கரும்பு அலுவலர் வில்லியம்அந்தோணி வரவேற்றார். மாவட்ட கவுன்சிலர்கள் சந்திரசேகரன், விஸ்வநாதன், ஒன்றிய சேர்மேன் ஓம்சிவ சக்திவேல், ஒன்றிய கவுன்சிலர் ஜெயந்தி சக்திவேல், ஊராட்சி தலைவர் வீரப்பன் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர்கள் எம்.எல்.ஏ.,க்கள் பொன்முடி, மணிக்கண்ணன் சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து செயலாட்சியர் கூறுகையில், '2024 - 25ம் ஆண்டு அரவைப் பருவத்தில் கரும்பு கிரயமாக மெட்ரிக் டன் ஒன்றுக்கு 3,151 ரூபாய் வீதம் 71 கோடியே 75 லட்சம் ரூபாய் 3,543 அங்கத்தினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு அறிவித்தபடி சிறப்பு ஊக்கத்தொகையாக மெட்ரிக் டன் ஒன்றுக்கு 349 விதம் 2 லட்சத்து 28 ஆயிரம் மெட்ரிக் பெண்களுக்கு 7 கோடியே 95 லட்சம் ரூபாய் கரும்பு அங்கத்தினருக்கு வழங்கப்பட்டது. 2025-26ம் ஆண்டு அரவைப்பருவத்தில் 2 லட்சத்து 35 ஆயிரம் மெட்ரிக் டன் கரும்பு அரவை செய்ய ஆலை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது' என்றார்.
இன்ஸ்பெக்டர் அழகிரி, ஊராட்சி துணைத் தலைவர் சக்கரவர்த்தி, கரும்பு விவசாயிகள் ஜோதிராமன், சாரங்கபாணி, பக்தவச்சலம், வெங்கடேசன், ராஜா, திருமால் மற்றும் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.
அலுவலக மேலாளர் இந்திரகுமார் நன்றி கூறினார்.