/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குட்கா விற்பனை விற்ற வாலிபர் கைது
/
குட்கா விற்பனை விற்ற வாலிபர் கைது
ADDED : அக் 01, 2025 11:05 PM

கோட்டக்குப்பம்: பெட்டிக்கடையில் குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
கீழ்புத்துப்பட்டு அருகே கடையில் குட்கா புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக கோட்டக்குப்பம் போலீசாருக்கு புகார் சென்றது. இதையடுத்து போலீசார் அப்பகுதியில் நேற்று முன்தினம் திடீரென சோதனை நடத்தினர். அப்போது, கீழ்புத்துப்பட்டு அடுத்த எல்லத்தரசு-பிம்ஸ் மருத்துவமனை சாலையில் உள்ள பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது.
அதன் பேரில் போலீசார், கடை உரிமையாளரான அதே பகுதியை சேர்ந்த கண்ணன் மகன் வினோத்குமார், 26; என்பவர் மீது வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த ஹான்ஸ், கூல் லிப் உள்ளிட்ட, 180 குட்கா புகையிலை பாக்கெட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.