/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வியாபாரியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
/
வியாபாரியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
ADDED : அக் 01, 2025 11:06 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்:குடிபோதையில் பால் வியாபாரியை தாக்கிய, 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
விழுப்புரம் அடுத்த சொர்ணாவூர் கீழ்பாதியை சேர்ந்தவர் செழியன், 46; வீடு வீடாக சென்று பால் கறந்து வியாபாரம் செய்து வருகிறார்.
கடந்த, 21ம் தேதி அப்பகுதி சமுதாய கூடம் அருகே பால் கறந்து கொண்டிருந்தார்.
அப்போது, சொர்ணாவூர் மேல்பாதியை சேர்ந்த காந்தி, ஜீவா, பிரபாகரன் ஆகியோர் குடிபோதையில் செழியனிடம் வீண் தகராறு செய்து திட்டி தாக்கினர்.
வளவனுார் போலீசார் காந்தி உள்ளிட்ட மூன்றுபேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.