/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது
/
போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது
ADDED : நவ 24, 2025 06:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: போதை மாத்திரை விற்ற பண்ருட்டி வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் குணசேகர், சாலாமேடு பொன்னியம்மன் கோவில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, கடலுார் மாவட்டம், சின்ன இளந்தம்பட்டை சேர்ந்த ஜெயகணேஷ், 25; என்பவர் போதை மாத்திரையை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.
விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து ஜெயகணேஷை கைது செய்து, 68 போதை மாத்திரையை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய திருவண்ணாமலையை சேர்ந்த புயல்முருகன் என்பவரை தேடிவருகின்றனர்.

