/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாவட்ட காங்., தலைவர் நியமனம் மேலிட பொறுப்பாளர் கருத்து கேட்பு
/
மாவட்ட காங்., தலைவர் நியமனம் மேலிட பொறுப்பாளர் கருத்து கேட்பு
மாவட்ட காங்., தலைவர் நியமனம் மேலிட பொறுப்பாளர் கருத்து கேட்பு
மாவட்ட காங்., தலைவர் நியமனம் மேலிட பொறுப்பாளர் கருத்து கேட்பு
ADDED : நவ 24, 2025 06:21 AM

திண்டிவனம்: திண்டிவனம் நகர காங்., அலுவலகத்தில், வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
விழுப்புரம் வடக்கு மாவட்டம் மற்றும் மத்திய மாவட்டத்திற்கு காங்., மேலிட பொறுப்பாளராக தெலுங்கானாவைச் சேர்ந்த வெங்கட் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையொட்டி நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநில துணைத் தலைவர் குலாம் மொய்தீன், விஷ்ணுபிரசாத் எம்.பி., விழுப்புரம் வடக்கு மாவட்ட தலைவர் ரமேஷ், மாவட்ட பொருளாளர் கருணாகரன், முன்னாள் தலைவர் தனுசு, நகர தலைவர் விநாயகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு பிறகு, மேலிட பொறுப்பாளர் வெங்கட், வட்டடார தலைவர், நகர தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து, விழுப்புரம் வடக்கு மாவட்ட தலைவர் நியமனம் குறித்து கேட்டறிந்தார்.