sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 ரேஷன் அரிசி கடத்தல் :வாலிபர் கைது

/

 ரேஷன் அரிசி கடத்தல் :வாலிபர் கைது

 ரேஷன் அரிசி கடத்தல் :வாலிபர் கைது

 ரேஷன் அரிசி கடத்தல் :வாலிபர் கைது


ADDED : மார் 11, 2026 04:14 AM

Google News

ADDED : மார் 11, 2026 04:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகே ஆந்திரா மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

விக்கிரவாண்டி அடுத்த பனமலைபேட்டை காலனி பஸ் நிறுத்தம் அருகே விழுப்புரம் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு, மூட்டைகளுடன் சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரை பிடித்து மூட்டைகளை சோதனை செய்ததில் 22 மூட்டைகளில் தலா 50 கிலோ எடையுள்ள ரேஷன் அரிசி மூட்டைகளை ஆந்திரா மாநிலத்திற்கு கடத்திச் செல்ல இருப்பது தெரியவந்தது.

விசாரணையில், அவர் ஆந்திரா மாநிலம், சித்துாரைச் சேர்ந்த பலராம் மகன் சதீஷ், 33; என தெரிந்தது.

உடன் ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us