ADDED : ஜூலை 10, 2025 02:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார், ஜூலை 10-
திருவெண்ணெய்நல்லுார் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் மற்றும் போலீசார் கொங்கராயனுார் தென்பெண்ணை ஆற்றுப்பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அனுமதியின்றி அந்த வழியாக மணல் கடத்தி வந்த, அதே பகுதியை சேர்ந்த சக்கரபாணி மகன் சவுந்தர்ராஜன், 35; என்பவரை கைது செய்தனர். டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.