/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பொக்லைன் உரிமையாளருக்கு கத்தி குத்து: வாலிபர் கைது
/
பொக்லைன் உரிமையாளருக்கு கத்தி குத்து: வாலிபர் கைது
பொக்லைன் உரிமையாளருக்கு கத்தி குத்து: வாலிபர் கைது
பொக்லைன் உரிமையாளருக்கு கத்தி குத்து: வாலிபர் கைது
ADDED : மே 29, 2025 11:25 PM
விழுப்புரம்,: பொக்லைன் வாடகை பணத்தை கேட்ட உரிமையாளரை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் அடுத்த அன்னியூரை சேர்ந்தவர் வினோத் 29; பொக்லைன் இயந்திரம் வைத்துள்ளார். இவரது பொக்லைன் இயந்திரத்தை விழுப்புரம் அடுத்த ஆலத்துாரை சேர்ந்த அன்பு, 37; என்பவர் கடந்த 6 மாதத்திற்கு முன் வாடகைக்கு எடுத்து சென்றார்.
இதற்கான வாடகை பணம் 14,000 ரூபாயை அன்பு கொடுக்காமல் இருந்துள்ளார்.
அந்த பணத்தை நேற்று முன்தினம் ஆலத்துாரில் கேட்ட வினோத்தை, அன்பு திட்டி சிறிய கத்தியால் குத்தினார்.
இதில், வினோத்தின் வலது இடது வயிறு குடல் சற்று வெளியில் வந்ததால், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து, அன்புவை கைது செய்து விசாரிக்கின்றனர்.