ADDED : ஏப் 18, 2025 04:36 AM
விழுப்புரம்: விழுப்புரம் அருகே பைக் திருடிய நபரை மக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விழுப்புரம் அருகே பி.குச்சிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி மகன் சத்தியமூர்த்தி, 25. இவர் 15ம் தேதி பிடாகம் கிராமத்தில் தனது பைக்கை நிறுத்தி பூட்டி விட்டு, பண்ருட்டிக்கு சென்றார்.
பின், நேற்று முன்தினம் வந்து சத்தியமூர்த்தி பார்த்த போது மூன்று பேர் வாகனத்தை திருடியதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அவர்களை பொது மக்கள் உதவியோடு பிடிக்க முயன்ற போது ஒருவர் மட்டும் சிக்கினார். அவரை பொது மக்கள் தர்ம அடி கொடுத்து, விழுப்புரம் தாலுகா போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், அவர், குறிஞ்சிப்பாடி அருகே ஆலப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சேகர் மகன் தமிழ்செல்வன்,32; என்பது தெரியவந்தது. தப்பிய நபர்கள் அதே கிராமத்தை சேர்ந்த ஜெயமூர்த்தி, குறிஞ்சிப்பாடி ரிஷி ஆகியோர் என்பதும் தெரிந்தது. அவர்கள் மூவர் மீதும் போலீசார் வழக்குப் பதிந்து தமிழ்செல்வனை கைது செய்தனர்.