/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பைக் திருடிய வாலிபர் கைது: 5 பைக்குகள் பறிமுதல்
/
பைக் திருடிய வாலிபர் கைது: 5 பைக்குகள் பறிமுதல்
ADDED : ஜூன் 08, 2025 10:23 PM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி பகுதியில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்த வாலிபரை போலீசார் கைது செய்து, 5 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.
விக்கிரவாண்டி மற்றும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்படும் பைக்குகள் தொடர்ச்சியாக திருடு போனது.
இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் சத்யசீலன், சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் பைக் திருட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்தினர்.
விசாரணையில், விழுப்புரம் அடுத்த ஒருகோடி கிராமத்தைச் சேர்ந்த ரவீந்திரன், 43; தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்ததும், கடந்த வாரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரவீந்திரனை கைது செய்த போலீசார், 5 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.