/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
3 பேரை துப்பாக்கியால் சுட்ட வாலிபர் குண்டாசில் கைது
/
3 பேரை துப்பாக்கியால் சுட்ட வாலிபர் குண்டாசில் கைது
3 பேரை துப்பாக்கியால் சுட்ட வாலிபர் குண்டாசில் கைது
3 பேரை துப்பாக்கியால் சுட்ட வாலிபர் குண்டாசில் கைது
ADDED : ஆக 13, 2025 12:20 AM

விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகே போதையில் மனைவி உள்ளிட்ட 3 பேரை துப்பாக்கியால் சுட்ட நபர் குண்டாசில் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வாக்கூர் நடுத்தெருவை சேர்ந்தவர் ராமசந்திரன் மகன் தென்னரசு, 36; மது பழக்கம் உடைய இவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
கடந்த ஜூலை, 12ம் தேதி, அவரது வீட்டில் மீண்டும் தகராறு ஏற்பட்டதால், மது போதையில் இருந்த தென்னரசு, வீட்டிலிருந்த மனைவி லாவண்யா, அவரது தாய் பச்சையம்மாள் ஆகியோரை, திடீரென தனது ஏர் கன் துப்பாக்கியால் சுட்டார்.
அதனை தடுக்க வந்த அவரது சித்தப்பா மகன் கார்த்திக்கையும் அவர் துப்பாக்கியால் சுட்டார். இதில் இருவர் உயிரிழந்தனர். விக்கிரவாண்டி போலீசார் கொலை வழக்கு பதிந்து, தென்னரசுவை கைது செய்தனர். தொடர்ந்து, அவரது குற்ற நடவடிக்கையை தடுக்கும் விதத்தில், விழுப்புரம் எஸ்.பி., சரவணன் பரிந்துரையில், கலெக்டர் ஷேக்அப்துல்ரஹ்மான், அவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். போலீசார் அவரை கைது செய்து, நேற்று கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.