ADDED : ஜூலை 25, 2025 02:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: பிரம்மதேசம் அருகே திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பிரம்மதேசம் அருகே ஆலங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 42; இவர், நேற்று முன்தினம் காலை 11:00 மணிக்கு தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றார்.
மதியம் 1:00 மணிக்கு வந்து பார்த்த போது, ஐந்தரை சவரன் நகை திருடு போனது தெரியவந்தது.
புகாரின் பேரில், பிரம்மதேசம் போலீசார் வழக்குப் பதிந்து சி.சி.டி.வி., பதிவுகளை கொண்டு ஆய்வு செய்தனர்.
அதில், மரக்காணம் அடுத்த எந்துார் கிராமத்தைச் சேர்ந்த சிவசங்கர் மகன் பிரவீன்குமார், 25; என்பவர், நகையை திருடியது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து, போலீசார் நேற்று அவரை கைது செய்து, நான்கரை சவரன் நகை மற்றும் 30 ஆயிரம் ரூபாய், மொபைல் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

