/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தடுப்பு காவல் சட்டத்தில் வாலிபர் கைது
/
தடுப்பு காவல் சட்டத்தில் வாலிபர் கைது
ADDED : ஜூலை 09, 2025 01:39 AM

விழுப்புரம் : விழுப்புரத்தில் வாலிபரை போலீசார் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
விழுப்புரம் அருகே விராட்டிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் மாசிலாமணி மகன் சாந்தமூர்த்தி,30; இவர், கடந்த ஜூன் 6ம் தேதி 16 வயதுள்ள மனநலம் பாதித்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.
சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து சாந்தமூர்த்தியை கைது செய்து, கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.
இவரை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய, எஸ்.பி., சரவணன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவின் பேரில், நேற்று விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார், சாந்தமூர்த்தியை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கான உத்தரவை, கடலுார் மத்திய சிறைச்சாலை போலீசாரிடம் வழங்கினர்.