/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பூச்சி மருந்து குடித்து வாலிபர் தற்கொலை
/
பூச்சி மருந்து குடித்து வாலிபர் தற்கொலை
ADDED : ஜூலை 10, 2025 07:04 AM
திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே பூச்சி மருந்து குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
பண்ருட்டி அருகே, எம்.பலாப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அய்யனார் மகன் பிரித்திவிராஜ், 28; கொத்தனார். இவருக்கு கடந்த, 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவருக்கும் மனைவி மஞ்சுவிற்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது.
இதனால் மன உளைச்சலில் இருந்து வந்தவர், கடந்த 1ம் தேதி பூச்சி மருந்து குடித்து ஆனத்துார் அய்யனார் கோவில் அருகே மயங்கி கிடந்தார்.
தொடர்ந்து விழுப்புரம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்தவர், நேற்று உயிரிழந்தார். திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.