/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரத்தில் இளைஞர் காங்., ஆலோசனை கூட்டம்
/
விழுப்புரத்தில் இளைஞர் காங்., ஆலோசனை கூட்டம்
ADDED : நவ 10, 2024 04:12 AM

விழுப்புரம், : விழுப்புரம் மத்திய மாவட்ட இளைஞர் காங்., சார்பில், இளைஞர்கள் எழுச்சி பயணம் நடைபெற்றது.
விழுப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட இளைஞர் காங்., தலைவர் ஸ்ரீராம் தலைமை தாங்கினார். விழுப்புரம் தொகுதி தலைவர் பிரபாகரன் வரவேற்றார்.
மத்திய மாவட்ட காங்., தலைவர் சீனிவாசகுமார் முன்னிலை வகித்தார். தமிழக இளைஞர் காங்., தலைவர் லெனின் பிரசாத் சிறப்புரை ஆற்றினார்.
இதில் அகில இந்திய உறுப்பினர் சிறுவை ராமமூர்த்தி, மாநில செயலாளர் தயானந்தம், முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவா, மாவட்ட துணைத் தலைவர்கள் ராஜ்குமார், முபாரக்அலி, நாராயணசாமி, காசிநாதன், மாவட்ட பொருளாளர் ராதாகிருஷ்ணன், நகர மன்ற கவுன்சிலர்கள் சுரேஷ்ராம், முகமது இம்ரான்கான், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் தன்சிங், எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாவட்ட தலைவர் சேகர், ஐ.என்.டி.யுூ.சி., தலைவர் அய்யனார் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.
இக்கூட்டத்தில், ராகுல் கரத்தை வலுப்படுத்த காங்., மீது பற்றுகொண்ட இளைஞர்களை கட்சியில் இணைக்க வேண்டும்.
வரும் சட்டசபை தேர்தலில், விழுப்புரம் தொகுதியை காங்., கட்சிக்கு ஒதுக்க வேண்டும். மின்னணு ஓட்டு எந்திர முறைக்கு மாற்றாக, பழைய ஓட்டுச் சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.
மத்திய அரசின் முகவராக செயல்பட்டு வரும் தமிழக கவர்னரை திரும்பப்பெற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.