/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வானூரில் கார் மோதிய விபத்தில் வாலிபர் பலி
/
வானூரில் கார் மோதிய விபத்தில் வாலிபர் பலி
ADDED : ஏப் 10, 2025 04:48 AM
வானூர்: வானூர் அருகே கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்.
மயிலம் அடுத்த சின்னநெற்குணம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை மகன் ராஜூ, 25; நேற்று முன்தினம் புதுச்சேரி மாநிலம் சேதராப்பட்டு பகுதி மதுபானக்கடைக்கு சென்று விட்டு, மீண்டும் மயிலம் நோக்கி நடந்து சென்றார்.
கரசானூர் கிராமம் சந்திப்பு அருகில் சென்றபோது, அவரது பின்புறமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், ராஜூ மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜூ சம்பவ இடத்திலேயே இறந்தார்.
வானூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கனகசெட்டிக்குளம் பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து, அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
அதில், எசாலம் பகுதியை சேர்ந்த இண்டிகா கார், விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்றது தெரிய வந்தது. வானூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரை தேடி வருகின்றனர்.