ADDED : டிச 07, 2024 08:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்டமங்கலம்: கண்டமங்கலம் ஏரியில் மூழ்கி வாலிபர் இறந்தார்.
கண்டமங்கலம் அடுத்த நத்தமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயக்கண்ணன் மகன் பார்த்திபன், 32; விவசாய கூலித் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் காலை 6:00 மணிக்கு ஏரிக்கரை பகுதிக்கு இயற்கை உபாதை கழிக்கச் சென்றவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் இரவு வரை தேடிய நிலையில், ஏரி நீரில் மூழ்கி இறந்தது தெரிந்தது.
இயற்கை உபாதை கழித்து விட்டு கால் கழுவ நீரில் இறங்கிய போது இறந்திருப்பது தெரியவந்தது.
புகாரின்பேரில் கண்டமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.