/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கள்ளக்காதல் பிரச்னையில் வாலிபர் வெட்டி கொலை
/
கள்ளக்காதல் பிரச்னையில் வாலிபர் வெட்டி கொலை
ADDED : ஆக 20, 2025 03:09 AM

மரக்காணம்:கள்ளக்காதல் பிரச்னையில் வாலிபரை வெட்டி கொன்ற ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்டம், கூனிமேடு, திடீர் நகரை சேர்ந்தவர் சாதிக்பாஷா, 24. இவர் தன் நண்பர்களோடு அதே பகுதி கடற்கரையில் நேற்று முன் தினம் இரவு மது அருந்திய போது, அப்பகுதிக்கு வீச்சரிவாள், கத்தியோடு வந்த ஐந்து பேர், சாதிக்பாஷாவை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.
விசாரணையில், திண்டிவனம் முருங்கம்பாக்கத்தை சேர்ந்த ரஹ்மத்துல்லா, 26, திருமணம் செய்த பெண்ணை, சாதிக்பாஷா ஏற்கனவே காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. சாதிக்பாஷா வெளிநாடு வேலைக்கு சென்று திரும்பிய நிலையில், அப்பெண்ணுடன் பேசியுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த ரஹ்மத்துல்லா, தன் நண்பர்கள் கலித்தரம்பட்டு பாரதிதாசன், 22, உட்பட நான்கு பேருடன் சேர்ந்து, சாதிக்பாஷாவை கொலை செய்தது தெரியவந்தது. மரக்காணம் போலீசார் ஐவரை கைது செய்தனர்.
முதியவர் கொலை
ராமேஸ்வரம் அருகே மண்டபம் எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்த கணபதி, 40, மண்டபத்தில் கருவாடு கடையில் வேலை செய்கிறார். அதே பகுதியை சேர்ந்த பெரியகருப்பன், 85, தன் ஆட்டுக்கு இரை கொடுக்க கணபதி வீட்டின் வளாகத்தில் இருந்த மரக்கிளைகளை வெட்டினார்.
அப்போது கணபதி, முதியவரிடம் இருந்த அரிவாளை பறித்து அவரை சரமாரியாக வெட்டினார். ரத்த வெள்ளத்தில் விழுந்த பெரியகருப்பனை உறவினர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் இறந்தார். கணபதியை போலீசார் கைது செய்தனர்.