/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கந்து வட்டி பிடியில் அரசு ஊழியர்கள் : ஏ.டி.எம்., கார்டை கைப்பற்றும் நிலை

ADDED : ஜூலை 11, 2011 10:52 PM
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் கந்து வட்டிகாரர்களின் பிடியில் சிக்கும் அரசு ஊழியர்கள், தங்களது ஏ.டி.எம்., கார்டை பறிகொடுத்து தவிக்கின்றனர்.
அருப்புக்கோட்டையில் கந்து வட்டிகாரர்கள் ஆதிக்கம் கொடி கட்டிபறக்கிறது . இவர்களிடம் பணம் வாங்கி வட்டி கொடுக்க முடியாமல், சொத்துக்களை இழந்தவர்கள் பலர் உள்ளனர். வியாபாரிகள் பலர் கடன் வாங்கி, வட்டி கட்ட முடியாமல் ஊரை விட்டே ஓடிய சம்பவமும் இங்கு அதிகம்.
தற்போது இந்த வரிசையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சிக்கி தவிக்கின்றனர். அவசர தேவைக்கு பணம் வாங்கும் இவர்களால் வட்டியை கட்ட முடியாமல், ஏ.டி.எம்., கார்டு, பென்சன் புக் ஆகியவற்றை கொடுக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சம்பள தினத்தன்று கந்துவட்டிகாரர்களால் வட்டி பணத்தை எடுத்து கொள்ள, மிதமுள்ள சொற்ப பணத்தை பெறும் நிலைக்கு ஆளாகி உள்ளனர். இதனால் வீட்டு செலவிற்கு கூட பணம் இல்லாமல் அவர்களிடமே மீண்டும் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் வாங்கிய பணத்தை விட வட்டி பல மடங்கு கட்டிய போதும், அசலை வாங்கவும் மறுக்கின்றனர். இது போன்ற வட்டிகாரர்களின் மிரட்டலால் பரிதவிப்பவர்களை மீட்க, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.