/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
புதிய அரசு மருத்துவக்கல்லுாரிகளில் முதுநிலை மருத்துவப்படிப்புக்கு அனுமதி
/
புதிய அரசு மருத்துவக்கல்லுாரிகளில் முதுநிலை மருத்துவப்படிப்புக்கு அனுமதி
புதிய அரசு மருத்துவக்கல்லுாரிகளில் முதுநிலை மருத்துவப்படிப்புக்கு அனுமதி
புதிய அரசு மருத்துவக்கல்லுாரிகளில் முதுநிலை மருத்துவப்படிப்புக்கு அனுமதி
ADDED : ஆக 01, 2025 01:33 AM
விருதுநகர்:தமிழகத்தில் 11 புதிய அரசு மருத்துவக்கல்லுாரிகளுக்கு முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான அனுமதியை தேசிய மருத்துவ ஆணையம்வழங்கியுள்ளது. ஒரு மருத்துவக்கல்லுாரிக்கு தலா 24 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், அரியலுார், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் புதிதாக அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைகள் 2022 ஜன. 12ல் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டன.
அப்போது சேர்ந்த மாணவர்கள் தற்போது இறுதியாண்டு பயின்று வருகின்றனர். இவர்களின் மேற்படிப்புக்காக இக்கல்லுாரிகளில் முதுநிலை மருத்துவ படிப்பு அனுமதி வழங்க கோரிக்கை எழுந்தது.
கடந்த மாதம் அனைத்து அரசு மருத்துவக்கல்லுாரிகளிலும் தேசிய மருத்துவ ஆணைய அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் துறை வாரியாக நியமிக்கப்பட்ட டாக்டர்களின் விவரங்கள், கூடுதலாக தேவைப்படும் டாக்டர்களின் எண்ணிக்கை குறித்தும் கேட்டறிந்தனர்.
இந்நிலையில் 11 புதிய அரசு மருத்துவக்கல்லுாரிகளிலும் முதுநிலை மருத்துவ படிப்பிற்கான அனுமதியை தேசிய மருத்துவ ஆணையம் வழங்கியுள்ளது. அறுவை சிகிச்சை, பொது மருத்துவம், மகப்பேறு உள்ளிட்ட துறைகளில் ஒரு கல்லுாரிக்கு 24 இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு முதல் படிப்புகள் துவங்கப்பட உள்ளன.