sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

தீப்பெட்டி உற்பத்தியில் இயந்திரம் : குடிசை தொழில் உற்பத்தியில் பாதிப்பு

/

தீப்பெட்டி உற்பத்தியில் இயந்திரம் : குடிசை தொழில் உற்பத்தியில் பாதிப்பு

தீப்பெட்டி உற்பத்தியில் இயந்திரம் : குடிசை தொழில் உற்பத்தியில் பாதிப்பு

தீப்பெட்டி உற்பத்தியில் இயந்திரம் : குடிசை தொழில் உற்பத்தியில் பாதிப்பு


ADDED : ஜூலை 15, 2011 09:56 PM

Google News

ADDED : ஜூலை 15, 2011 09:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: தீப்பெட்டி உற்பத்தியில் இயந்திரங்கள் வருகையால் , குடிசை தொழில் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டு,இதை நம்பி பிழைப்பு நடத்திய,மூன்று லட்சம் பணியாளர்கள் வழியின்றி தவிக்கின்றனர்.தமிழகத்தில் விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் தீப்பெட்டி உற்பத்தி செய்யப்படுகின்றன.

திருச்சி , சென்னை, சேலம் மாவட்டங்களிலும் ஓரளவு தீப்பெட்டி உற்பத்தியாகின்றன. தற்போது தீப்பெட்டி தொழில் இயந்திர மயமாக்கப்பட்டதால் குடிசைத்தொழிலாக நடந்து வரும் தீப்பெட்டி தயாரிப்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குடிசை தொழிலில் ஒரு மாதத்தில் 5 லட்சம் பண்டல்கள் தயாரிக்கப்படும் நிலையில், இயந்திரங்களில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பண்டல்கள் தயாரிக்கப்படுகின்றன. அதிக அளவில் தாயாரிப்பு செய்யும் இயந்திர உற்பத்தியாளர்கள், குறைந்த விலையில் விற்பனை செய்வதால், குடிசை தொழிலாக செய்யப்படும் தீப்பெட்டி உற்பத்திகள் பாதிக்கின்றன. இதனால் இயந்திரங்களுடன் போட்டி போட முடியாமல், பலரும் தீப்பெட்டி உற்பத்தியை நிறுத்தி விட்டனர். இதை நம்பி பிழைப்பு நடத்தி வந்த 3 லட்சம் பணியாளர்கள் வழியின்றி தவிக்கின்றனர். பெரும்பாலானோர் பிழைப்பு தேடி திருப்பூர் போன்ற தொழில் நகரங்களுக்கு இடம் பெயர்கின்றனர்.அகில இந்தி குடிசை தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க கூட்டமைப்பு பொது செயலாளர் பழனிக்குமார் கூறுகையில்,'' குடிசை தொழிலாக தயாரிக்கும் தீப்பெட்டிகளை அரசே கொள்முதல் செய்து ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய முன் வர வேண்டும். நியாயமான விலையில் மூலப்பொருட்கள் கிடைக்க, தற்போது இயங்கி வரும் பெருங்குழுமங்களில் மூலப்பொருள் கிடங்குகள் அமைத்து , இவர்களுக்கு மானியத்துடன் வங்கி கடன் வழங்கி, தீப்பெட்டி பணியாளர்கள் வெளி இடங்களுக்கு இடம் பெயர்வதை தவிர்க்க வேண்டும்,''என்றார்.








      Dinamalar
      Follow us