/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரூ. 9 கோடியில் சேதமான ரோடுகள் சீரமைக்க டெண்டர்
/
ரூ. 9 கோடியில் சேதமான ரோடுகள் சீரமைக்க டெண்டர்
ADDED : ஜன 01, 2026 05:54 AM
சிவகாசி: சிவகாசி மாநகராட்சியில் ரூ. 9 கோடியில் சேதம் அடைந்த ரோடுகளை சீரமைப்பதற்கு டெண்டர் விடப்பட உள்ளது என கமிஷனர் சரவணன் தெரிவித்தார்.
சிவகாசி மாநகராட்சியில் ரூ. 30 லட்சத்தில் விளாம்பட்டி ரோடு, காந்தி ரோடு பகுதிகளில் பேட்ஜ் ஒர்க் பார்க்கப்பட்டது. மாக திருத்தங்கல் சத்யா நகர் ரோடு, ரத வீதிகள், சிவகாசி டானா ரோடு என 15 கிலோமீட்டர் ரோடுகள் சேதம் அடைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சேதம் அடைந்த ரோடுகளை சீரமைக்க ரூ. 9 கோடி நிதி ஒதுக்கப்பட்டு டெண்டர் விடப்பட உள்ளது.
கமிஷனர் சரவணன் கூறுகையில் , மாநகராட்சியில் சேதமடைந்த ரோடுகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 9 கோடி நிதி ஒதுக்கி டெண்டர் விடப்பட உள்ளது. விரைவில் சேதமடைந்த ரோடுகள் சீரமைக்கப்படும். அடுத்தடுத்து மாநகராட்சி முழுவதுமே சேதமடைந்த ரோடுகள் கணக்கெடுக்கப்பட்டு முழுமையாக சீரமைக்கப்படும், என்றார்.

