/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
முன்னாள் மாணவர்கள் சங்கம் துவக்க விழா
/
முன்னாள் மாணவர்கள் சங்கம் துவக்க விழா
ADDED : ஜன 01, 2026 05:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நரிக்குடி: திருச்சுழி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சங்கம் துவக்க விழா நடந்தது.
2022 -- -25ம் ஆண்டில் படித்த மாணவர்கள் சந்தித்து, புதிதாக சங்கம் உருவாக்கினர். கல்லூரி முதல்வர் பியூலா தலைமை வகித்தார். செயலாளர் கணேசன், இணைச் செயலாளர் மகேஸ்வரி, பொருளாளர் ராஜலட்சுமி முன்னிலை வகித்தனர். மாணவர் சங்க தலைவராக பொன்னிறுவாள், செயலாளராக அன்பரசன், பொருளாளராக சுபாஸ்ரீ தேர்வு செய்யப்பட்டனர்.
இன்றைய தலைமுறைக்கான கல்வி, வேலை வாய்ப்புகள் குறித்து அறிஞர் சுகுமார் பேசினார். கல்லூரியின் வளர்ச்சிக்கான பணிகளில் மாணவர்கள் தங்களை இணைத்துக் கொண்டு உதவுவதாக உறுதியளித்தனர்.

