நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: சாத்துார் மேலக்காந்தி நகரை சேர்ந்தவர் சங்கர், 61. இவர் மனைவி தெய்வானை, 55. மார்க்சிஸ்ட் கம்யூ.வை சேர்ந்த இவர் சாத்துார் நகராட்சி 8 வது வார்டு கவுன்சிலர்.டிச. 27ல் தாயில் பட்டியில் கட்சிப் பணியை முடித்துவிட்டு அவர் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுந்தர பாண்டியன்,50. னுடன் டூவீலரில் சாத்துார் வந்தார்.
(இருவரும் ஹெல்மெட் அணியவில்லை) ராமச்சந்திராபுரம் விலக்கருகே வந்த போது ரோட்டில் உள்ள பள்ளத்தில் செல்லும் போது டூ வீலரில் இருந்து கவுன்சிலர் நிலை தடுமாறி கீழே விழுந்து தலையில் படுகாயம் அடைந்தார்.
மதுரை தனியார் மருத்துவமனையில் நேற்று பலியானார். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

