/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மது போதையில் நீதிமன்றத்தில் தகராறு செய்த வாலிபர் கைது
/
மது போதையில் நீதிமன்றத்தில் தகராறு செய்த வாலிபர் கைது
மது போதையில் நீதிமன்றத்தில் தகராறு செய்த வாலிபர் கைது
மது போதையில் நீதிமன்றத்தில் தகராறு செய்த வாலிபர் கைது
ADDED : டிச 31, 2025 05:47 AM
சிவகாசி: சிவகாசி விஸ்வநத்தம் காமராஜர் நகரை சேர்ந்தவர் ஜெயவேல்ராஜ் 27. இவர் நேற்று காலை 10:30 மணியளவில் சிவகாசி நீதிமன்றத்திற்கு வந்தார். அவர் மீது உள்ள வழக்குகளுக்கு வாரண்டை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்து நீதிமன்றத்தில் சரண்டர் ஆகி இருந்தார். அப்போது பணியில் இருந்த கிளார்க் மகேந்திரன், ஜெயவேல் ராஜை அழைத்து பெயர் முகவரி விசாரித்த போது, நான் 8 ஆண்டுகளாக வாய்தாவிற்கு அலைவதாக சத்தம் போட்டுள்ளார். அப்போது அங்கு வந்த நீதிபதி விஜய பாரதி பணியில் இருந்த போலீசாரை அழைத்து மது போதையில் உள்ளாரா என சோதனை செய்ய கூறினார்.
ஜெயவேல்ராஜ் ஆமாம் நான் குடித்துள்ளேன் என்று கத்தினார். நீதிமன்ற பணிகளுக்கு இடையூறு செய்ததாக அவரை திருத்தங்கல் போலீசார் கைது செய்தனர்.