/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் ஒருங்கிணைந்த ரத்த மாதிரி சேகரிப்பு மையம்

ADDED : டிச 31, 2025 05:48 AM
விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நோயாளிகளின் வசதியையும், ஆய்வக சேவைகளின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஒருங்கிணைந்த ரத்த மாதிரி சேகரிப்பு மையம் திறக்கப்பட்டது.
உயிர்வேதியியல், நோயியல், நுண்ணுயிரியல் துறைகள் இணைந்து இம்மையத்தை அமைத்துள்ளன.
இதன்மூலம் பல்வேறு துறைகளுக்கு சென்று ரத்த மாதிரி வழங்க வேண்டிய அவசியம் இன்றி ஒரே இடத்தில் மாதிரிகளை வழங்கலாம்.
இதனால் நோயாளி களின் காத்திருப்பு நேரம் குறையும்.
தினமும் வெளிநோயாளிகள் 305 பேர், உள் நோயாளிகள் 545 பேரிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன.
ஆய்வகத் துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளதால் மாதிரிகளை விரைவாகவும், துல்லியமாகவும் பரிசோதிக்க முடியும். நோயாளியின் பாதுகாப்பு, ஆய்வுத் தரத்தை உறுதி செய்ய பயிற்சி பெற்ற தொழில்நுட்ப வல்லுநர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
திறப்பு விழாவில் கல்லுாரி டீன் ஜெயசிங், மருத்துவ கண்காணிப்பாளர் அரவிந்த் பாபு, ஆர்.எம்.ஓ., வைஷ்ணவி, ஏ.ஆர்.எம்.ஓ., வரதீஸ்வரி, துறைத் தலைவர்கள் ரேகா, குணசுந்தரி, கவுரி உட்பட பலர் பங்கேற்றனர்.