ADDED : டிச 31, 2025 05:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர், டிச. 31 -
விருதுநகர் கே.வி.எஸ்., மேல்நிலைப்பள்ளியில் காளிமார்க் கே.பி.கணேசநாடார் -- சரோஜா சுழற்கோப்பைக்கான மாநில ஹாக்கி போட்டிகள் நேற்று தொடங்கின.
வி.எஸ்.வி.என்., பாலிடெக்னிக் கல்லுாரி முன்னாள் செயலாளர் வெற்றிவேல் தலைமையில், கே.வி.எஸ்., பள்ளி முன்னாள் மாணவர் வெங்கடேசன் போட்டியை தொடங்கி வைத்தார்.
மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராஜபாளையம், சிவகாசி, அருப்புக்கோட்டை, காரைக்குடி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்கின்றன.

