/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வி.ஏ.ஓ.,க்கள் காத்திருப்பு போராட்டம்
/
வி.ஏ.ஓ.,க்கள் காத்திருப்பு போராட்டம்
ADDED : டிச 31, 2025 05:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் (வி.ஏ.ஓ.,) சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
வி.ஏ.ஓ., அலுவலகங்களில் கழிப்பறை, குடிநீர், இணைய சேவை அமைக்க வேண்டும். நியமனங்களில் கல்வித் தகுதியை பட்டப்படிப்பாக உயர்த்த வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
மாநில செயலாளர் பாண்டியன், மாவட்ட செயலாளர் வில்லி ஆழ்வார், பொருளாளர் வெள்ளை பாண்டியன், வட்ட செயலாளர் கார்த்திகேயன் உட்பட மாவட்டம் முழுவதுமிருந்து 200க்கும் மேற்பட்ட வி.ஏ.ஓ.,க்கள் பங்கேற்றனர்.

