ADDED : டிச 31, 2025 05:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஓய்வூதியர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் புவனேசன் தலைமையில் கருப்பு பட்டை அணியும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள், வருவாய் உதவியாளர்களுக்கு சட்டப் பூர்வ ஓய்வூதியம், பணிக் கொடை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
சங்க மாவட்ட நிதிக்காப்பாளர் ராஜன், மின்வாரிய ஓய்வூதியர் சங்க நிர்வாகி ஜெயபால், பி.எஸ்.என்.எல்., ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சமுத்திரக்கனி, ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் செல்வின் உட்பட பலர் பங்கேற்றனர்.

