sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

குழந்தைகள் இறப்பு குறைக்க புதிய தடுப்பூசி திட்டம் அமல்

/

குழந்தைகள் இறப்பு குறைக்க புதிய தடுப்பூசி திட்டம் அமல்

குழந்தைகள் இறப்பு குறைக்க புதிய தடுப்பூசி திட்டம் அமல்

குழந்தைகள் இறப்பு குறைக்க புதிய தடுப்பூசி திட்டம் அமல்


ADDED : ஆக 30, 2011 01:52 AM

Google News

ADDED : ஆக 30, 2011 01:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: குழந்தைகள் இறப்பை தடுக்க'பென்டா வேலன்ட்' தடுப்பூசி திட்டம் , அக்டோபர் முதல் தமிழகம்,கேரளாவில் செயல்படுத்த உள்ளது.பிறந்த குழந்தைகளுக்கு டி.பி.டி.,தடுப்பூசி மூலம் உயிர் காக்கும் திட்டம், தமிழகத்தில் செயல்படுகிறது.

இது இருமல், தொண்டை அடைப்பான், ரண ஜன்னி என மூன்று நோய்களை மட்டும் கட்டுப்படுத்தும். தற்போது கூடுதாலாக மஞ்சள் காமாலை, நிமோனியா சளியை கட்டுப்படுத்தும், 'பென்டாவேலன்ட்' என்ற தடுப்பூசியினை குழந்தைகளுக்கு போட, சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. இதை கேரளா, தமிழகத்தில் செயல்படுத்த உள்ளது. பிறந்த குழந்தைகளின் இறப்பு விகிதத்தை குறைக்க, இத்திட்டம் அக். முதல் துவக்கப்படுகிறது. ஒன்றரை , இரண்டரை , மூன்றரை மாத குழந்தைகளுக்கு, ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம், அரசு ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசி போடப்படவுள்ளது. தனியார் ஆஸ்பத்திரிகளில் போட ரூ. 2000 செலவாகும். இதை செயல்படுத்த டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.விருதுநகர் சுகாதார துணை இயக்குனர் பாலசுப்பிரமணியன் கூறுகையில், '' குழந்தைகள் இறப்பு விகிதத்தை குறைக்க, 'பென்டாவேலன்ட்' தடுப்பூசி அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் ஐந்து நோய்களை கட்டுப்படுத்தலாம். இதனால் குழந்தைகள் இறப்பு விகிதம், 50 சதவீதம் குறைய வாய்ப்புள்ளது,'' என்றார்.








      Dinamalar
      Follow us