/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
---நீண்ட காத்திருப்புக்குப்பின் ரயில்வே சுரங்கப்பாதை பணிகள் துவக்கம்
/
---நீண்ட காத்திருப்புக்குப்பின் ரயில்வே சுரங்கப்பாதை பணிகள் துவக்கம்
---நீண்ட காத்திருப்புக்குப்பின் ரயில்வே சுரங்கப்பாதை பணிகள் துவக்கம்
---நீண்ட காத்திருப்புக்குப்பின் ரயில்வே சுரங்கப்பாதை பணிகள் துவக்கம்
ADDED : ஆக 18, 2024 04:50 AM

ராஜபாளையம் : ராஜபாளையத்தில் நீண்ட எதிர்பார்ப்பில் இருந்த ரயில்வே சுரங்கப்பாதை பணிகள் ஒரு வழியாக தொடங்கியுள்ளது.
ராஜபாளையம் ரயில்வே மேம்பாலம் அருகே சுரங்கப்பாதை அமைத்து ஆம்புலன்ஸ் உள்ளிட்ட சிறிய வாகனங்கள் கடந்து செல்ல திட்ட அனுமதி வழங்கப்பட்டது. இதற்காக டி.பி.,மில்ஸ் ரோட்டில் இருந்து அடுத்துள்ள பி.எஸ்.கே ரோட்டை கடக்கும் வகையில் சிமென்ட் பிளாக்குகள் அதற்கான இணைப்புகள் என பெரிய அளவில் தயாரிக்கப்பட்டு தண்டவாளத்தை ஒட்டி வைக்கப்பட்டு விட்டன.
இந்நிலையில் சத்திரப்பட்டி ரயில்வே மேம்பாலம் கடந்த ஆண்டு ஜூன் மாதமே செயல்பாட்டிற்கு வந்தும் அதற்கு முன்பே நடைமுறைக்கு வரவேண்டிய ரயில்வே சுரங்கப்பாதை காரணம் தெரியாமல் வெயில் மழையில் காய்ந்து வந்தன. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்து வெளியானது.
இந்நிலையில் சுரங்கப்பாதை பணிகள் தொடங்கியுள்ளன. முதல் கட்டமாக சிமெண்ட் பிளாக்குகளை வரிசைப்படுத்தி நிறுத்தி பாதைகளை சரிப்படுத்தும் பணி ராட்சத வாகனங்கள் மூலம் தொடங்கியுள்ளது.
இதற்காக 30 டன் எடையை கையாளும் வகையில் லாரிகள் மூலம் கொண்டுவரப்பட்ட பிரேம்களை இணைத்து நேற்று லிப்ட் இயந்திரம் மூலம் துாக்கி நிறுத்தும் பணி தொடங்கியது. ஆக.23ல் சிமென்ட் பிளாக்குகளை தண்டவாளத்திற்கு இடையே வைக்க உள்ளது.