/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
----வைக்கோலும் கை கொடுக்கல நெல் விலையும் குறைஞ்சிடுச்சு--
/
----வைக்கோலும் கை கொடுக்கல நெல் விலையும் குறைஞ்சிடுச்சு--
----வைக்கோலும் கை கொடுக்கல நெல் விலையும் குறைஞ்சிடுச்சு--
----வைக்கோலும் கை கொடுக்கல நெல் விலையும் குறைஞ்சிடுச்சு--
ADDED : மார் 03, 2024 05:45 AM

ராஜபாளையம்: ராஜபாளையம் சுற்றுவட்டார நெல் விவசாய பகுதியில் கடைசி கட்ட அறுவடை எட்டிய நிலையில், நெல் விலையுடன், வைக்கோலும் கை கொடுக்காததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதியாக உள்ளதால் ராஜபாளையம், சேத்துார், முகவூர், தேவதானம் பகுதியில் நெல் விவசாயம் அதிகம்.
இந்த ஆண்டு பரவலாக அயன் கொல்லங் கொண்டான், கோட்டை, நக்கனேரி, சிதம்பராபுரம், தெற்கு வெங்காநல்லுார் உள்ளிட்ட பகுதிகளில் கடைசி கட்ட அறுவடை எட்டி உள்ள நிலையில் வைக்கோலின் விலையை ஏக்கர் ரூ.1,400 க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்து வருகின்றனர்.
ஏற்கனவே நெல் விளையும் குறைந்து வைக்கோலும் கை கொடுக்காததால் விவசாயிகள் வேதனையில் உள்ளாகின்றனர்.
இதுகுறித்து விவசாயி வெங்கடேஷ்: பருவமழை தாமதத்தால் சாகுபடி பணிகளை தாமதித்து துவக்கினோம். கடந்த ஆண்டு வைக்கோல் ஏக்கர் ரூ.2200க்கு கொள்முதல் செய்த வியாபாரிகள் தற்போது விளைச்சல் குறைவை முன்னிட்டு வைக்கோலை கட்டுகளாக விலை நிர்ணயிப்பதால் ஏக்கருக்கு ரூ. 1400 வரையே கிடைக்கிறது. இத்துடன் தொடக்கத்தில் ரூ.2200 வரை நெல் கொள்முதல் செய்தவர்கள் தற்போது ரூ. 1700 வரை கேட்கின்றனர். இதனால் இரண்டு பக்கமும் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. நிலையில்லாத இந்த விலை மாறுபாட்டை அரசு கண்காணித்து விவசாயிகளுக்கான பாதிப்பை சரி செய்ய வேண்டும், என்றார்.

