/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
----சொக்கர் கோயிலில் தெப்போற்ஸவம்
/
----சொக்கர் கோயிலில் தெப்போற்ஸவம்
ADDED : பிப் 23, 2024 05:32 AM

ராஜபாளையம்: ராஜபாளையம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் மாசி மக பிரமோற்ஸவத்தையடுத்து நேற்று இரவு தெப்போற்சவம் நடந்தது.
பிப். 15ல் கொடியேற்றத்துடன் தொடங்கி பத்து நாள் நடைபெறும் திருவிழா காலங்களில் தினமும், மூலவர் உற்ஸவருக்கு விசேஷ அபிஷேகங்கள் பூஜைகள் தொடர்ந்து சுவாமி அம்பாள் புறப்பாடும் மாலையில் திருப்பராயணம் நடந்தது.
சிறப்பு நிகழ்ச்சியாக திருக்கல்யாணத்தை அடுத்து தெப்போற்ஸவம் நேற்று இரவு 7:30 மணிக்கு நடந்தது. இதில் கோயில் அருகே உள்ள மானசரோவர் தெப்பத்தில் வண்ண மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் மீனாட்சியுடன் சொக்கர் சிறப்பு அலங்காரத்தில் மூன்று முறை சுற்றி வலம் வந்தார்.
சுவாமியுடன் பக்தர்கள் ரதத்தில் சுற்றி வந்தனர். திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.