/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சேத்துாரில் யானை புகுவதை தடுக்க அகழி அமைக்கும் பணி துவக்கம்
/
சேத்துாரில் யானை புகுவதை தடுக்க அகழி அமைக்கும் பணி துவக்கம்
சேத்துாரில் யானை புகுவதை தடுக்க அகழி அமைக்கும் பணி துவக்கம்
சேத்துாரில் யானை புகுவதை தடுக்க அகழி அமைக்கும் பணி துவக்கம்
ADDED : டிச 19, 2024 04:27 AM

சேத்துார்: ராஜபாளையம் அருகே சேத்துார் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் வனவிலங்குகள் விளை நிலங்களுக்குள் புகுவதை தடுக்கும் வகையில் ஐந்து கிலோ மீட்டர் தொலைவிற்கு அகழி அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகத்தில் ராஜபாளையம் வனச்சரகம் சேத்துார் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மா தென்னை வாழை பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இப்பகுதியில் யானை காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் இரவு நேரங்களில் காட்டை விட்டு வெளியேறி விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
வனவிலங்குகள் விளை நிலங்களுக்குள் புகுவதை தடுக்க மலையடிவாரத்தில் அகழிகள் அமைக்கவும் விவசாய நிலங்களுக்கு சோலார் மின்வெளி அமைத்து தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் ராஜபாளையம் வனச்சரகத்தில் அதிகம் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள குளிராட்டி பீட் முதல் பிராவடி பீட் வரை 5 கி.மீ., துாரத்திற்கு 3 மீட்டர் ஆழம் 2 மீட்டர் அகலத்தில் சேத்துார் மலையடிவாரத்தில் அகழிகள் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது. இதனால் விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.