/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
--ஊர்க்காவல் படை வீரருக்கு பாராட்டு
/
--ஊர்க்காவல் படை வீரருக்கு பாராட்டு
ADDED : ஜன 13, 2024 05:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம் : விருதுநகர் மாவட்ட ஊர்க்காவல் படை சார்பாக சிறப்பு பயிற்சி பெற்று திரும்பிய ராஜபாளையம் ஊர்க்காவல் படை வீரருக்கு எஸ்பி சீனிவாச பெருமாள் பாராட்டி பரிசு வழங்கினார்.
இந்தியாவில் உள்ள போலீஸ் துறை அதிகாரிகளுக்கு பெங்களூர் போலீஸ் அகாடமியில் 87வது 'ஆல் இந்தியா வாட்டர்மென்ஷிப் கோர்ஸ்' பயிற்சி நடந்தது. மாவட்ட ஊர்க்காவல் படை சார்பாக ராஜபாளையத்தை சேர்ந்த ஊர்க்காவல் படை வீரர் மாடசாமி பங்கேற்று சிறப்பித்ததை பாராட்டி எஸ்.பி சீனிவாச பெருமாள் வெகுமதி வழங்கினார். வட்டார தளபதி அழகர்ராஜா, எஸ்.ஐ தேவதாஸ் உடன் இருந்தனர்.