ADDED : ஆக 12, 2025 06:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்திரப்பட்டி : சத்திரப்பட்டி அருகே ரெங்கப்பநாயக்கன்பட்டியில் அடிப்படை வசதி கேட்டு கிராமத்தினர் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சத்திரப்பட்டி அடுத்த நல்ல நாயக்கர் பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ரெங்கப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மட்டும் குடிநீர் வழங்கப்படுகிறது. மேலும் மின் விளக்கு, சாலை, கழிவுநீர் வாறுகால், ரேஷன் கடை உள்ளிட்ட எந்த அடிப்படை வசதி கேட்டு ரெங்கப்பநாயக்கன்பட்டி விலக்கில் காலிக் குடங்களுடன் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கீழ ராஜகுலராமன் போலீசார் பேச்சுவார்த்தை யடுத்து கலைந்து சென்றனர். போக்குவரத்து சிறிது நேரம் பாதிப்பு ஏற்பட்டது.