ADDED : செப் 26, 2011 10:04 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: ஆமத்தூர் வள்ளியூரை சேர்ந்தவர் தேவராஜ் மகள் ஜெயபிரியா,20.
இவர் விருதுநகரில் நகை கடையில் வேலை செய்கிறார். நேற்று முன்தினம் வேலை முடிந்து ஊருக்கு செல்வதற்காக, அரசு டவுன் பஸ்சில் சென்றார். இவரை இதே ஊரை சேர்ந்த ஆதிமூலம் மகன் பொன்இருளன்,31, கேலி செய்து, இடுப்பை கிள்ளியுள்ளார். ஜெயபிரியா புகார்படி ஆமத்தூர் போலீசார் பொன்இருளனை கைது செய்தனர்.

