ADDED : அக் 06, 2011 11:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்தூர் : சாத்தூர் துணை மின்நிலையத்தின் மூலம் சாத்தூர்,
படந்தால்,வெங்கடாசலபுரம் உட்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின்சாரம்
சப்ளையாகிறது.
நேற்று முன் தினம் சாத்தூரில் பெய்த காற்றுடன் கூடிய
கனமழையால் பலஇடங்களில் மின்கம்பிகள் சாய்ந்ன. மின்னல் தாக்கியதில்
டிரான்ஸ்பார்மரில் பழுது ஏற்பட்டது. இதனால் நேற்று முன் தினம் இரவு,
ஏ.புதுப்பட்டி, இருக்கன்குடி, படந்தால், வெங்கடாசலபுரம் உட்பட 50க்கும்
மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கின.

