ADDED : மே 16, 2024 06:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு தாலுகா புதுப்பட்டியில் கிணற்றில் விழுந்த மான் குட்டியை தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
புதுப்பட்டியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான தோப்பில் உள்ள கிணற்றில், நேற்று மதியம் 12:00 மணிக்கு ஒரு மான்குட்டி ஒன்று தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.
தகவல் அறிந்த வத்திராயிருப்பு தீயணைப்பு துறையினர் மான் குட்டியை உயிருடன் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.