ADDED : ஏப் 06, 2024 04:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார : ஸ்ரீவில்லிபுத்தூரில் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
கோட்ட பொறியாளர் பரதன், உதவி பொறியாளர் பொன் முரளி தலைமை வகித்தனர். பின்னர் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் இருந்து துறை அலுவலர்கள், சாலை ஆய்வாளர்கள், சாலை பணியாளர்கள் ஊர்வலமாக
நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றனர். அப்போது நூறு சதவீத ஓட்டுப்பதிவின் அவசியத்தை வலியுறுத்தி பொதுமக்களிடம் நோட்டீஸ்கள் வழங்கினர்.

