ADDED : மார் 22, 2024 04:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் சௌடாம்பிகா இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் 100 சதவீத ஓட்டு பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர்.
ஆர்.டி.ஓ., வள்ளிக்கண்ணு துவக்கி வைத்தார். தாசில்தார் செந்திவேல், கல்லூரி செயலர் வெள்ளைச்சாமி, முதல்வர் அருள்மொழி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் மாணவர்கள் விழிப்புணர்வு வாசகங்களுடன் முக்கிய வீதிகள் வழியாக சென்றனர்.- - -

