தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/சேதமடைந்த அரசு பள்ளி கட்டடங்களை சீரமையுங்க:மழைக்காலத்திற்குள் சரி செய்வது அவசியம்

சேதமடைந்த அரசு பள்ளி கட்டடங்களை சீரமையுங்க:மழைக்காலத்திற்குள் சரி செய்வது அவசியம்

சேதமடைந்த அரசு பள்ளி கட்டடங்களை சீரமையுங்க:மழைக்காலத்திற்குள் சரி செய்வது அவசியம்


UPDATED : ஆக 04, 2026 10:47 PM

ADDED : ஆக 04, 2026 04:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 04, 2026 10:47 PM ADDED : ஆக 04, 2026 04:21 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அருப்புக்கோட்டை:அரசு பள்ளிகளில் சேதமடைந்த கட்டடங்கள் உள்கட்ட மைப்பு வசதிகள் உள்ளிட்டவைகளை மழைக்காலத்திற்குள் சீரமைக்க வேண்டுமென பெற்றோர் விரும்புகின்றனர்.

மாவட்டத்தில் ஊராட்சிகளில் உள்ள அரசு பள்ளிகள் போதிய வகுப்பறைகள், குடிநீர், கழிப்பறை, கட்டடங்கள் சேதம், விளையாட்டு மைதானம், காம்பவுண்ட் சுவர் உள்ளிட்ட முழுமையான வசதிகள் கிடைக்காமல் பல ஆண்டுகளாக மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பள்ளிகளில் காம்பவுண்ட் சுவர் இல்லாததால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. சமூக விரோத செயல்கள் நடப்படும் அதற்கு ஏதுவாகவும் உள்ளது.

திருச்சுழி அருகே மறவர் பெருங்குடி உயர்நிலைப்பள்ளியில் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு பள்ளிக்கு காம்பவுண்டு சுவர் இல்லை. தற்காலிகமாக முள்வேலி போடப்பட்டுள்ளது.

தும்முசின்னம்பட்டியில் அரசு மேல்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு போதுமான டெஸ்க், பென்ஞ்ச் இல்லாமல் அவதிப்படுகின்றனர். இட நெருக்கடியாக உள்ளதால் கூடுதலாக 2 வகுப்பறைகள் தேவைப்படுகிறது. கழிப்பறை வசதி வேண்டும். வடக்கு நத்தம் அரசுஉயர்நிலை பள்ளியில் காம்பவுண்ட் சுவர் இல்லை. கட்டடமும் சேதமாக உள்ளது. பெரிய சோளாண்டி, ராஜகோபாலபுரம் துவக்க பள்ளிகளுக்கு சுற்று சுவர் இல்லை. அடிப்படை வசதிகள் தேவையாக உள்ளது. சலுக்குவார்பட்டி அரசு பள்ளியில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லாமல் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.

பல பள்ளிகளுக்கு விளையாட்டு மைதானம் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. மைதானம் இல்லாத பள்ளிகளும் உள்ளது. சுற்றுச்சூழல் இல்லாத பள்ளிகளில் குடிமகன் குடித்துவிட்டு படுப்பதும், சமூக விரோத செயல் நடைபெற வசதியாக இருக்கிறது.

மழைக்காலத்திற்கும் பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மாவட்டம் நிர்வாகம் நேரில் ஆய்வு செய்து அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது, கிராம மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

----

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us